×

கொரோனா பரவல் எதிரொலி: சித்ரா பெர்ணமி அன்று திருவண்ணாமலையில் பக்தர்கள், பொதுமக்கள் கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவண்ணாமலை சித்ரா பெளர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என பக்தர்கள், பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவண்ணாமலை ஒவ்வொரு மாதமும் பெர்ணமி நாட்களில் கிரிவலம் நடைபெறும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் பெளர்ணமி கிரிவலத்தில் கலந்து கொள்வார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு  மார்ச் 24-ம் தேதி முதல் தற்போது வரை கிரிவலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது மார்ச் 31 முதல் புதிய கட்டுப்பாடுகளும் ஏப்ரல் 31 வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊருடங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சித்ரா பெளர்ணமி நாளான ஏப்.26 முதல் 27 வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கிரிவலம் செல்ல வேண்டாம் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார். மேலும் கொரோனா பரவல் அதிகம் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post கொரோனா பரவல் எதிரொலி: சித்ரா பெர்ணமி அன்று திருவண்ணாமலையில் பக்தர்கள், பொதுமக்கள் கிரிவலம் செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Krivalam ,Tiruvannamalai ,Chitra Bernami ,Thiruvannamalai ,Chitra Pelarnami ,Corona ,
× RELATED வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் * சிறப்பு...